தீபாவளி பிறந்த கதை

Spread the love
 •  
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares

இந்திய கலாச்சாரத்தில் பண்டிகைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது அதேபோல் தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளி என்பது தீ ஒளி என்று பொருள்.அதாவது தீமை அகன்று நன்மை பிறக்கும் திருநாள் என்பதாகும்.தீபாவளி கொண்டாட முக்கிய காரணம் கிருஷ்ணனின் லீலை என்பது எல்லோருக்கும் தெரிந்தே ஒன்றே.உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை வீழ்த்தி வெற்றி பெற்றார் கிருஷ்ணன் அனால் அதே சமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்று கொள்கிறார்.இதுவே தீபாவளி தோன்றுவதற்கான காரணம்.

நரகாசூரனின் பிறப்பும் பெயர் காரணமும்

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

நரகாசூரனின் வரம்
நரகாசூரன் என்பவன் பூமி தாய்க்கு பிறந்தவன்.அவனை அவன் தாய் மட்டும் தான் கொள்ள முடியும் அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான்.இந்த காரணத்தினால் அவன் எண்ணற்ற பாவங்களை செய்துவந்தான்.

மஹாவிஷ்ணுவின் செயல்
நரகாசூரன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்து அவனுடன் போர் புரிந்த்தார். நரகாசூரன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்த பொது அந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.

நரகாசூரனின் இறப்பு தீபாவளியின் பிறப்பு
நரகாசூரன் தன தாயிடம் “நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும்” என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இனிப்பு பரிமாறப்படுவது ஏன்?
நரகாசூரனின் இறப்பு சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தன சகோதரி வீட்டிற்கு செல்கின்றார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும் இனிப்பும் அளிக்கப்படுகிறது.இதனால் தன தீபாவளி அன்று அனைவரும் நண்பர்கள்,உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றியது.

பட்டாசு வெடிப்பதற்கான காரணம்
தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். வீடுகளில் அன்றைய தினம்விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகும்.அடிப்படையில் தீபாவளி இந்து பண்டிகையாக இருந்தாலும்,சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையை கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

uma.signitiv@gmail.com'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *